

புதுடெல்லி,
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக 'ட்ரி என்ற நிறுவனம் சார்பில் நேற்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய ஜவடேகர், உலகின் மொத்த மக்கள் தொகையில் 18 சதவிகிதம் இந்தியாவில் உள்ளது. உலகின் மொத்த கால்நடை எண்ணிக்கையில் 18 சதவிகிதம் இந்தியாவில் உள்ளது.
மனிதர்கள் மற்றும் கால்நடை அதிகரிப்பே நாட்டில் தண்ணீர் வளம் குறைய காரணம் ஆகும். வேளாண் பணிகளில் 85 சதவிகிதம் நீர் செலவிடப்படுகிறது. பல்வேறு யுக்திகளை கொண்டு வந்து வேளாண் பணியில் செலவிடப்படும் தண்ணீரின் அளவை குறைக்க வேண்டும் என்றார்.