6-வது நாளாக கொரோனா பாதிப்பு 3 லட்சத்துக்கு கீழ் குறைவு; 24 மணி நேரத்தில் 4,529 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் புதிய உச்சமாக 24 மணி நேரத்தில் 4,529 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 3,89,851 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
6-வது நாளாக கொரோனா பாதிப்பு 3 லட்சத்துக்கு கீழ் குறைவு; 24 மணி நேரத்தில் 4,529 பேர் உயிரிழப்பு
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாதவகையில் கொரோனாவால் 4,529 பேர் இறந்துள்ளனர்.

இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 83 ஆயிரத்து 248 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 14-ந் தேதியில் இருந்து கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு இறங்குமுகம் கண்டு வருகிறது. இந்த வகையில் இன்று 6-வது நாளாக தொற்று 3 லட்சத்துக்கு கீழ் பாதிப்பு குறைந்து உள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் நாட்டில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 334 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகினர்.

நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 54 லட்சத்து 96 ஆயிரத்து 330 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெற்ற தரமான சிகிச்சையின் பலனாக இன்று ஒரே நாளில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 851 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

இதுவரை நாட்டில் 2 கோடியே 19 லட்சத்து 86 ஆயிரத்து 363 பேர் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீள்வதற்காக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இன்று 32 லட்சத்து 26 ஆயிரத்து 719 ஆக குறைந்துள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 18 கோடியே 58 லட்ச்சத்து 09 ஆயிரத்து 302 பேர் ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com