இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

தற்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கிற்குப் பங்களிக்கப்படும் கட்டாயச் சம்பள உச்சவரம்பு ரூ.15,000 ஆக உள்ளது.
இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?
Published on

தொழிலாளர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இபிஎப் ஓ எனப்படும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. அடிப்படை சம்பளம்+அகவிலைப்படியில் சுமார் 12 சதவீதம் வருங்கால வைப்பு நிதியாக தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதே அளவு தொகையை நிறுவனங்களும் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் செலுத்துகின்றன. இது ஒரு மறைமுக சேமிப்பு திட்டமாக இருப்பதால் தொழிலாளர்களின் அவசர தேவைகளுக்கு பெரிதும் கை கொடுக்கின்றன.

தற்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கிற்குப் பங்களிக்கப்படும் கட்டாயச் சம்பள உச்சவரம்பு ரூ.15,000 ஆக உள்ளது. இதை ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு இந்த வரம்பு ரூ.6,500-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், குறைவான சம்பளம் பெறுபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யாமல் முழு தொகையும் கையில் கிடைக்கும். இது ஊழியர்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியை கொடுத்தாலும் அவர்களின் வருங்கால சேமிப்பு என்பது பாதிக்கப்படும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com