சிக்னலுக்கு காத்திருந்த எக்ஸ்பிரெஸ் ரெயிலில் புகுந்து கொள்ளை அடித்து தப்பிய கும்பல்

சிக்னலுக்கு காத்திருந்த எக்ஸ்பிரெஸ் ரெயிலில் புகுந்து 15 நிமிடங்களில் பயணிகளிடம் கொள்ளை அடித்து கும்பல் ஒன்று தப்பி சென்றது.
சிக்னலுக்கு காத்திருந்த எக்ஸ்பிரெஸ் ரெயிலில் புகுந்து கொள்ளை அடித்து தப்பிய கும்பல்
Published on

புதுடெல்லி,

ஜம்முவில் இருந்து டெல்லி நோக்கி 12266 எண் கொண்ட துரந்தோ எக்ஸ்பிரெஸ் ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்துள்ளது. இந்த நிலையில் டெல்லி ரோஹில்லா ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தபொழுது, இன்று அதிகாலை ஆயுதமேந்திய மர்ம நபர்கள் பயணிகளிடம் கொள்ளை அடித்துள்ளனர்.

இதுபற்றி அஷ்வனி குமார் என்ற பயணி புகார் தெரிவிக்கும் ரெயில்வே வலைதளம் வழியே தெரிவித்துள்ள புகாரில், 7 முதல் 10 மர்ம நபர்கள் அதிகாலை 3.30 மணியளவில் சிக்னலுக்காக காத்திருந்த ரெயிலின் பி3 மற்றும் பி7 ஆகிய ரெயில் பெட்டிகளுக்குள் நுழைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர் என தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவத்தில் பயணிகளிடம் இருந்து பர்ஸ், பணம், தங்க நகைகள், மொபைல் போன்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. ரெயில் நின்ற 10 முதல் 15 நிமிடங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com