ஒவ்வொரு இந்தியரின் மனதிலும், சிந்தனையிலும் அப்துல்கலாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்: பிரதமர் மோடி

ஒவ்வொரு இந்தியரின் மனதிலும், சிந்தனையிலும் அப்துல்கலாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஒவ்வொரு இந்தியரின் மனதிலும், சிந்தனையிலும் அப்துல்கலாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்: பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று புகழப்படும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் காலமின் 87-வது பிறந்த நாள் இன்று நினைவு கூறப்படுகிறது. 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாளில் பிறந்த அப்துல் கலாம், இந்தியாவின் 11-வது ஜனாதிபதியாக 2002-2007 வரை பதவி வகித்தார்.

அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு ராமேஷ்வரம் அருகே உள்ள பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் பள்ளி குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரும் திரண்டு வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அவரை வெகுவாக புகழ்ந்துள்ள பிரதமர் மோடி, டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- தனித்துவமான ஆசிரியர், சிறந்த ஊக்குவிப்பாளர், ஆகச்சிறந்த விஞ்ஞானி, மிகப்பெரும் ஜனாதிபதியாக இருந்த கலாம், ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் சிந்தனையில் வசித்து வருகிறார். பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூறுகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மக்கள் ஜனாதிபதியான ஏபிஜே அப்துல் கலாமை நினைவு கூறுகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com