கொரோனா பாதிப்பு: கேரளாவில் 12 ஆக உயர்வு; கர்நாடகாவில் புதிதாக 3 பேரை தாக்கியது

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு: கேரளாவில் 12 ஆக உயர்வு; கர்நாடகாவில் புதிதாக 3 பேரை தாக்கியது
Published on

திருவனந்தபுரம்,

சீனாவின் உகான் நகரில் தோன்றிய உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் பிற நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலக அளவில் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் கெரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில், கேரளாவில் நேற்று முதல் நாள் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது. பத்தினம் திட்டாவில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. 5 பேரில் 3 பேர் இத்தாலியில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் உறவினர்கள் 2 பேருக்கு வைரஸ் தாக்கியது. ஏற்கனவே கேரளாவில் மூன்று பேருக்கு வைரஸ் தாக்கி குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர்.

இந்த நிலையில் கேரளாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பத்தினம் திட்டாவில் 2 பேருக்கும், கோட்டயத்தில் 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதன் மூலம் கேரளாவில்12 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எல்லோரும் தனியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதேபோல் இன்று புதிதாக புனேவில் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. இவர்கள் இரண்டு பேரும் துபாய் சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மராட்டியத்தில் இதன் மூலம் முதல் முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் கர்நாடகாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com