கேரளாவில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 50 வயது மீனவர் உயிரிழப்பு

கேரளாவில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 50 வயது மீனவர் உயிரிழந்தார்.
கேரளாவில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 50 வயது மீனவர் உயிரிழப்பு
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் தெருநாய்கள் தொல்லையானது அதிகரித்து காணப்படுகிறது. தெருநாய்கள் முதியவர்கள் மற்றும் சிறார்களை குறிவைத்து தாக்குதவது வழக்கமான சம்பவமாக உள்ளது. மாநிலத்தில் தெருநாய்களுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு விலங்குகள் ஆர்வலர்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். பஞ்சாயத்து அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் நாய் தொல்லையானது அங்கு தொடர்ச்சியாக இருந்து வருகிறது. நேற்று திருவனந்தபுரம் கடற்கரையில் மீனவர் ஜோஸ்லின்னை (வயது 50) தெருநாய்கள் ஒன்றாக சேர்ந்து தாக்கியது.

தெருநாய்களால் கடித்து, குதறப்பட்ட அவர் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதே புல்லுவிளை பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் மூதாட்டி ஒருவர் தெருநாய்களால் கடித்து கொல்லப்பட்டார்.

கேரளாவில் தெருநாய்கள் பொதுமக்களை கடிக்கும் சம்பவமானது அதிகரித்து காணப்படுகிறது, இவ்விவகாரத்தை எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையிலும் எழுப்பி வருகிறார்கள். கடந்த வருடம் மட்டும் சுமார் 53 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தெருநாய்கள் கடித்ததில் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் தெருநாய்களால் கடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட சுமார் 19 பேருக்கு ரூ. 33.37 லட்சம் நிதிஉதவி வழங்க கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

கடந்த வருடம் கேரளா அச்சுறுத்தலான நாய்களை கொல்வது என்று முடிவெடுத்ததை மத்திய மந்திரி மேனகா காந்தி சட்டவிரோதமானது என விமர்சனம் செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com