பரம்பிக்குளம்-ஆழியாறு நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய கேரளா திட்டம்

கேரளா-தமிழ்நாடு இடையே பரம்பிக்குளம்-ஆழியாறு நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் பல ஆண்டுகளாக அமலில் உள்ளது.
பரம்பிக்குளம்-ஆழியாறு நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய கேரளா திட்டம்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவுக்கு ஆண்டுதோறும் இந்த ஒப்பந்தப்படி 7.25 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் வழங்க வேண்டும். இந்த நதிநீர் பங்கீடு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு கேரள சட்டசபையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று பதிலளித்தார்.

அப்போது அவர், பழமையான இந்த ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வதற்கு கடந்த 1988-ம் ஆண்டு முதலே கேரளா நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஆனால் விதிமுறைகள் விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே புரிந்துணர்வு எட்டப்படாததால், அது நிறைவேறாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் அதிக பங்கை பெறும் நோக்கில் தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்த பினராயி விஜயன், இந்த திட்டம் தொடர்பாக சென்னையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந் தேதி நடைபெறும் செயலாளர் மட்டத்திலான கூட்டத்திலும் இதற்கு முன்னுரிமை கொடுப்போம் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com