சவுதி அரேபியா ஹதீஸை ஆராய குழு அமைப்பு கேரள முஸ்லீம் அறிஞர்கள் வரவேற்பு

ஹதீஸை ஆராய சவுதி அரேபியா குழு அமைத்துள்ளது. இதற்கு கேரள முஸ்லீம் அறிஞர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
சவுதி அரேபியா ஹதீஸை ஆராய குழு அமைப்பு கேரள முஸ்லீம் அறிஞர்கள் வரவேற்பு
Published on

கோழிக்கோடு

வன்முறை அல்லது பயங்கரவாதத்தை நியாயப்படுத்த ஹதீசை பயன்படுத்துவதைத் தடுக்க ஆராய ஒரு குழு அமைக்க சவுதி அரேபியா முயற்சிக்கிறது அதற்காக கேரளா முஸ்லீம் அறிஞர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

சவுதி கலாச்சாரம் மற்றும் தகவல் அமைச்சகத்தை மேற்கோளிட்டு ராய்ட்டர்ஸ் வெளியிட்டு உள்ள செய்தியில் ஹதீஸின் பயன்பாடுகளைப் பரிசோதிக்க. மன்னர் சல்மான் ஒரு அதிகார சபையை ( மன்னர் சல்மான் காம்ப்ளக்ஸ்) உருவாக்குவதற்கு உத்தரவிட்டு உள்ளார்.

இந்த அமைப்பு இஸ்லாத்தின் போதனைகளுக்கு முரணான போலி மற்றும் தீவிரவாத உரை மற்றும் குற்றங்கள், கொலைகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் உரைகளை அகற்றும். மன்னர் சல்மான் காம்ப்ளக்ஸ் சரியான மற்றும் நம்பகமான ஹதீஸ்களின் நம்பகமான ஆதாரமாக மாறும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைக்கு கேரள முஸ்லீம் அறிஞர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

ஹதீஸ்களை ஆராய்வது ஒரு வரவேற்க தக்க செயலாகும். அவைகளில் சில தவறான நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன என சமூக ஆர்வலர் காரச்சேரி கூறி உள்ளார்.

செக்கன்னூர் மவுளவி ஹதீஸ்கள் நம்பகத்தன்மையை கடுமையாக கேள்விக்குள்ளாக்கிக் கொண்டுள்ளது. இஸ்லாமில் குர்ஆன் ஒன்றே ஏற்றுக்கொள்ளப்பட்ட நூலாக இருக்க வேண்டும் என கூறினார்.

ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்பொருள்படும். இஸ்லாமிய உலகில் ஹதீஸ் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது சொல் செயல் ஆகியவற்றுக்கும் அவர் மவுனமாக இருந்து அங்கீகரித்த விசயங்களுக்கும் சொல்லப்படும்.

அதே போல நபித்தோழர்களது சொல் செயல் அங்கீகாரத்திற்கும் ஹதீஸ் என்று சொல்லப்படுவதுண்டு. ஒரு சாரார் இதற்கு அஸர் என்று வேறுபெயரிட்டு அழைப்பர்.

ஹதீஸ் குதுஸி என்றால் அல்லாஹ் சொல்கிறான் என்று முன்னுரையிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லும் பொன்மொழியாகும். இந்த தகவல் குர்ஆனில் இருக்காது.

உதாரணமாக பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அல்லாஹ் சொல்கிறான் மனிதன் என்னை திட்டுகிறான். மனிதன் காலத்தை திட்டுகிறான் . காலத்தை நானல்லவா படைத்தேன். (முஸ்லிம்)

ஹீஹ் அறிவிப்பாளர் தொடர் முழுமையாக சொல்லப்பட்டு அவர்கள் அனைவரும் பரிபூர்ண நம்புக்ககைக்குரிய நேர்மையாளராகவும் மிக்க மன சக்தியுள்ளவராகவும் மனிதத்தன்மை மிக்கவராகவும் இருந்து அவர்களால் சொல்லப்படும் ஹதீஸ் அவர்களை விடச் சிறந்தவர்களின் அறிவிப்புக்கு முரண்படாமலும் இருந்தால் அது ஹீஹ் என்ற முதல் தரமான ஹதீஸ் ஆகும்.

அறிவிப்பாளரின் தகுதிகள் முழுமை பெற்றிராத நிலையில் ஒரு ஹதீஸின் கருத்துக்கள் வேறு பல வழிகளில் அறிவிக்கப்பட்டிருக்குமானால் அது ஹஸன் என்றழைக்கப்படும்.

அறிவிப்பாளர்களின் தகுதியில் குறைப்பாடுகள் இருந்து மற்ற விதிமுறைகளில் தேறாத ஹதீஸ்கள் லயீப் எனப்படும்.

உண்மை அல்லாத பொய்யாக இட்டுக்கட்டி சொல்லப்பட்ட ஹதீஸ்கள் மவ்லூஉ எனப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com