

புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில் விவசாயிகள் போராட்டத்தின்போது நடந்த வன்முறை தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கிய அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இது தொடர்பாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன் நேற்று ஆஜரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன், மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். அதை பரிசீலித்த நீதிபதி, லகிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில் ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கிய அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு வருகிற 11-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.