எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்ப்பு

எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எல்.ஐ.சி.யின் 22 கோடி பங்குகளை விற்று ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது, அரசின் தனியார்மயமாக்கலின் ஒரு அங்கம். தேசிய சொத்துகளை விற்பது வருத்தம் அளிக்கிறது. தற்போதைய செலவுகளை ஈடுகட்ட நீண்டகால சொத்துகளை விற்பது மிகவும் துயரமானது. அதற்கு பதிலாக கார்ப்பரேட் வரியை அதிகரித்து இருக்கலாம். ஆகவே, இந்த விற்பனை முடிவை உடனே கைவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது அறிக்கையில், எல்.ஐ.சி. பங்கு விற்பனை ஒரு பிரமாண்ட ஊழல். மக்கள் சொத்துகளை கொள்ளையடிக்கும் செயல். இதை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com