பல்கலைக்கழகத்தில் நடமாடும் சிறுத்தை: அச்சத்தில் மாணவர்கள் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா கால்நடை பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை அட்டகாசம் அதிகரித்துள்ளதால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் நடமாடும் சிறுத்தை: அச்சத்தில் மாணவர்கள் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்
Published on

திருப்பதி,

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா கால்நடை பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை அட்டகாசம் அதிகரித்துள்ளதால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருப்பதியில் மலை அடிவாரத்தில் கால்நடை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் வனவிலங்குகள் உலா வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு சிறுத்தை ஒன்று, நாய் ஒன்றை வேட்டையாடி அதன் உடல் பாகங்களை பல்கலைகழக வளாகத்திற்குள் போட்டு சென்றுள்ளது.

சிறுத்தை நடமாட்டத்தால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கல்லூரி வளாகம் முன்பு மாணவ, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com