அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் - பக்தர்கள் அச்சம்

பக்தர்கள் கூட்டம் கூட்டமாக செல்ல வேண்டும் என்று வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் - பக்தர்கள் அச்சம்
Published on

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள், மான்கள், மலைப்பாம்புகள், நரிகள், காட்டுப்பன்றிகள், செந்நாய்கள் உள்ளன. இவற்றில் சிறுத்தைகள், மான்கள், மலைப்பாம்புகள், கரடிகள் அடிக்கடி பக்தர்கள் நடமாடும் மலைப்பாதைகள் வழியாக கடந்து செல்லும்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் அலிபிரி நடைபாதையில் நரசிம்மர் கோவில் அருகே 150 மீட்டர் தூரத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது, அங்குப் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்தது. இதையடுத்து அலிபிரி நடைபாதை வழியாக மலையேறி செல்லும் பக்தர்களுக்கு ஒலி பெருக்கி மூலம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

அலிபிரி நடைபாதையில் செல்லும் பக்தர்கள் அனைவரும் கையில் கைத்தடிகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக செல்ல வேண்டும் என்று வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு படிக்கட்டுகளில் ஒரு வனத்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அலிபிரி நடைபாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com