சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது.!

திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அதிகாலை 3.15 வரை சாத்தப்பட்டு இருக்கும்.
சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது.!
Published on

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சனிக்கிழமை என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நேரடி இலவச தரிசனத்தில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பின. அதற்கு வெளியே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

இந்த நிலையில், சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டு உள்ளது. அதிகாலை 3.15 வரை 8 மணிநேரம் கோவில் சாத்தப்பட்டு இருக்கும். நாளை அதிகாலை பரிகார பூஜைக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com