உள்நாட்டு விமான சேவைகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்

உள்நாட்டு விமான சேவைகள் எந்த வித கட்டுப்பாடும் இன்றி வழக்கமான நடைமுறையை பின்பற்றலாம் என்று மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விமான சேவைகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்
Published on

புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானப்போக்குவரத்தில் 54 சதவிகித இருக்கை வசதியை பயன்படுத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாட்டில் வைரஸ் பரவல் பெருமளவு குறைந்துள்ளதையடுத்து உள்நாட்டு விமான சேவைகளில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகம் நீக்கியுள்ளது.

அதன்படி வரும் 18-ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை எந்த வித கட்டுப்பாடும் இன்று முழுமையாக 100 சதவிகித இருக்கை வசதியுடன் பயணங்களை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com