பத்திரிகைகளின் குரல்வளையை நெரிப்பவர்களை மோடி அரசு கடுமையாக எதிர்க்கிறது: அமித் ஷா

பத்திரிகைகளின் குரல்வளையை நெரிப்பவர்களை மோடி அரசு கடுமையாக எதிர்க்கிறது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பத்திரிகைகளின் குரல்வளையை நெரிப்பவர்களை மோடி அரசு கடுமையாக எதிர்க்கிறது: அமித் ஷா
Published on

புதுடெல்லி,

தேசிய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தொடங்கப்பட்ட நாளான நவம்பர் 16 ஆம் தேதி இந்தியா முழுவதும் தேசிய பத்திரிகையாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துகள். நமது மாபெரும் தேசத்தின் அஸ்திவாரங்களை வலுப்படுத்த நம்முடைய ஊடக சகோதரத்துவம் அயராது உழைத்து வருகிறது.

பத்திரிகைகள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமென்பதில் மோடி அரசு உறுதி பூண்டுள்ளது. அதேநேரம் அதன் குரல்வளையை நெரிப்பவர்களைக் கடுமையாக எதிர்க்கிறது. கொரோனா காலங்களில் ஊடகங்களின் குறிப்பிடத்தக்க பங்கை நான் பாராட்டுகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com