மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி ”பாரதி பிறந்த மண்ணில் நிற்பதில் பெருமைப்படுகிறேன்” என பேச்சு

சென்னையில் மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். #PMModi
மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி ”பாரதி பிறந்த மண்ணில் நிற்பதில் பெருமைப்படுகிறேன்” என பேச்சு
Published on

சென்னை,

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் அம்மா ஸ்கூட்டர் திட்டம் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பின்னர் பிரதமர் மோடி மகிழ மர கன்றை நட்டு வைத்தார். அதன் பின்னர் அம்மா மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார் .

பேச்சை துவங்கும் முன் தமிழில் வணக்கம் சொல்லி பேச்சை தொடங்கினார்.

மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

* தமிழுக்கும், தமிழ் பாரம்பரியத்திற்கும் நான் தலைவணங்குகிறேன்.

* பாரதி பிறந்த மண்ணில் நிற்பதில் பெருமைப்படுகிறேன், பெண்கள் படித்தால் குடும்பமே கற்றதாக அர்த்தம்.

*முத்ரா யோஜனா திட்டத்தில் பலனடைந்தவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்.

* பெண்களுக்கான மகப்பேறு விடுமுறையை 26 வாரங்களாக அதிகரித்து தந்துள்ளோம்.

* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏராளமான நிதி வழங்கப்பட்டுள்ளது.

* காங்கிரஸ் அரசை விட அதிக நிதியை திட்டக் கமிஷனில் இருந்து பெற்று தந்தோம்.

* உஜாலா திட்டத்தின் மூலமாக கரியமில வாயு மாசு குறைந்துள்ளது.

* பெண்கள் அதிகாரம் பெறும் வகையில் ஏராளமான திட்டங்களை மத்திய அரசு வழங்குகிறது.

* பெண் தொழில் முனைவோருக்கு ரூ 10 லட்சத்திலிருந்து ரூ 1 கோடி வரை, கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com