140 பேரை பலி கொண்ட மோர்பி தொங்கு பாலம்; பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

குஜராத் பாலம் விபத்தில் 15 மணி நேரத்துக்கும் மேலாக மீட்பு பணி தொடருகிறது.
140 பேரை பலி கொண்ட மோர்பி தொங்கு பாலம்; பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
Published on

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது.

சிதிலம் அடைந்த அந்த பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையடுத்து, மக்களின் பயன்பாட்டுக்காக குஜராத்தி புத்தாண்டு தினமான கடந்த 26-ந் தேதி பாலம் திறந்துவைக்கப்பட்டது.

இந்தநிலையில், விடுமுறை நாளான நேற்று மாலை 6.30 மணி அளவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

அப்போது அவர்களின் எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதையடுத்து, பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்தனர். தகவல் அறிந்து தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் உடனடியாக விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

குஜராத் பாலம் விபத்தில் 15 மணி நேரத்துக்கும் மேலாக மீட்பு பணி தொடருகிறது. 400 பேர் ஆற்றில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை 140க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கபட்டு உள்ளது.

இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com