அர்செனல் கால்பந்து கிளப்பை வாங்குகிறாரா முகேஷ் அம்பானி..?

அர்செனல் (Arsenal) கால்பந்து கிளப்பை தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அர்செனல் கால்பந்து கிளப்பை வாங்குகிறாரா முகேஷ் அம்பானி..?
Published on

புதுடெல்லி,

ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர், நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி. இவர் இங்கிலாந்தின் ,உலக புகழ்பெற்ற கால்பந்து கிளப் அணியான லிவர்புல் அணியை வாங்குவதற்கான ஏலத்தில் இறங்கியுள்ளதாக அண்மையில் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது.

இந்த நிலையில், லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து கிள்ப்புகளில் ஒன்றான அர்செனல் (Arsenal) கிளப்பை தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல கால்பந்து கிளப்பான லிவர்பூல் எஃப்சியை வாங்க ஆர்வம் காட்டிய முகேஷ் அம்பானி தற்போது மற்றொரு அர்செனல் கால்பந்து கிளப்பை வாங்க ஆர்வம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி அர்செனலின் தீவிர ரசிகர் என்றும் இதனால் மான்செஸ்டர் யுனைடெட் அல்லது லிவர்பூல் எஃப்சிக்கு பதிலாக ஆர்சனல் எஃப்சியை வாங்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அர்செனல் கால்பந்து கிளப் என்பது அர்செனல் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமாகும். அர்செனல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (KSE UK INC)-க்கு சொந்தமானது ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com