

புனே,
மராட்டியத்தின் மும்பை நகரில் பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதில், தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை கட்டுமான பணியின்போது திடீரென மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் 9 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும், நகர போலீசார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றுள்ளனர்.
அவர்கள் மேம்பால இடிபாடுகளின் கீழ் யாரும் சிக்கியுள்ளனரா? என்று தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.