மும்பையில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

மராட்டிய தலைநகர் மும்பையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
மும்பையில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரசின் 2- வது அலை வேகமாக பரவி வருகிறது. மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மாநில அரசு எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய தலைநகர் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை 6,923- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. மும்பையில் ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு இதுதான் ஆகும். மும்பையில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,98,674 - ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com