

பீகாரின் ஆனந்த் விகாரில் இருந்து முசாபர்நகர் நோக்கி சப்த்கிராந்தி எக்ஸ்பிரெஸ் ரெயில் இன்று சென்று கொண்டிருந்தது.
அந்த ரெயில் சம்பரான் மாவட்டத்தில் உள்ள வால்மீகிநகர் ரெயில் நிலையம் அருகே வந்தபொழுது இருக்கையில் அமர்வதில் பயணிகளுக்கும், கும்பல் ஒன்றிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், அந்த கும்பல் பயணிகளை அடித்து தாக்கியுள்ளது.
அவர்களை கட்டுக்குள் கொண்டு வர பயணி ஒருவர் சமரசத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமுற்ற அந்த கும்பல் பயணியை அடித்து ரெயிலில் இருந்து தூக்கி வெளியே வீசியுள்ளது. இந்த சம்பவத்தில் பயணி பலத்த காயமடைந்துள்ளார். அவர் யாரென்று அடையாளம் தெரியவில்லை. போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.