2016-2021-ல் உயர்கல்வி சேர்க்கையில் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 1.83 லட்சம் அதிகரிப்பு..!

2016-2021-ல் உயர்கல்வி சேர்க்கையில் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 1.83 லட்சம் அதிகரித்துள்ளதாக மத்திய கல்வித்துறை இணை மந்திரி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

2016-17ல் உயர்கல்வி நிறுவனங்களில் 17.39 லட்சமாக இருந்த முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை 2020-21ல் 19.22 லட்சமாக அதிகரித்துள்ளது என்று மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஸ் சர்க்கார் தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளித்த அவர், 2020-21ம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் புள்ளிவிவரங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

2020-21ம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வின்படி (AISHE), 2016-17ல் 17.39 லட்சமாக இருந்த முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை 2020-21ல் 19.22 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல், 2016-17ல் 67,215 ஆக இருந்த முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 2020-21ல் 86,314 ஆக அதிகரித்துள்ளது.

பல்வேறு முயற்சிகள் மூலம் சிறுபான்மை மாணவர்களை அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம், புத்த, கிறிஸ்தவ, ஜெயின், முஸ்லீம், சீக்கிய மற்றும் ஜோராஸ்ட்ரியன் ஆகிய ஆறு சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மூன்று கல்வி அதிகாரமளிக்கும் திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com