

மைசூர்,
கர்நாடக மாநிலம் மைசூருவில் கோவில் நிகழ்ச்சியில் பிரசாதம் சாப்பிட்ட மக்கள் மயக்கமடைந்தனர். என்னவென்று தெரியாத நிலையில் 6 பேர் உயிரிழந்தனர். 80க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரசாதம் சாப்பிட்ட 60க்கும் மேற்பட்ட காகங்களும் உயிரிழந்துள்ளது. உயிரிழப்புக்கான காரணம் என்னவென்று தெரியவரவில்லை. இதுதொடர்பாக விசாரணையும் தொடங்க உள்ளது. பிரசாதம் சாப்பிட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.