

புதுடெல்லி,
வடஇந்தியாவில் ஹர்கத் உல் ஹர்ப் இ இஸ்லாம் என்ற புதிய பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) தெரிய வந்தது. சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தால் கவரப்பட்ட அதன் ஆதரவாளர்கள் இந்த அமைப்பை தொடங்கி உள்ளனர். இதுதொடர்பாக என்.ஐ.ஏ.வுக்கு உளவுத்துறை தகவல் அளித்தது. இதனையடுத்து டெல்லி, உத்தரபிரதேசத்தில் அதிரடி சோதனையை நடத்திய தேசிய புலனாய்வு பிரிவு 10 பேரை கைது செய்தது.
வடமாநிலங்களில் குறிப்பாக டெல்லியில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவதற்கு இந்த இயக்கத்தினர் சதித்திட்டம் தீட்டி இருப்பதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்பேது பயங்கரவாத அமைப்புக்கு ஆயுதங்களை சப்ளை செய்ததாக நாயிம் என்ற 21 வயது இளைஞரை தேசிய புலனாய்வு அமைப்பு மீரட்டில் கைது செய்துள்ளது. பயங்கரவாத அமைப்பினர் தாக்குதலை முன்னெடுப்பதில் மிகவும் தயார் நிலையில் இருந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.