இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

ஏடிஎம்களில் பெரும்பாலும் ரூ.500, 200 தாள்களே வருவதால், இவற்றிற்கு சில்லரை வாங்குவதற்குள் திண்டாட வேண்டிய நிலை மக்களுக்கு உள்ளது.
இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?
Published on

டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் ஏடிஎம்களில் மக்கள் பணம் எடுப்பதும் குறையத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் கிராமப்புறங்களிலும் சிறு வியாபாரிகளும் அன்றாட பரிவர்த்தனைகளுக்கு பெரும்பாலும் ரொக்கப் பணத்தையே நம்பியுள்ளனர். இதனால், கடைகளில் சில்லரை கிடைப்பது பெரும் சிக்கலாக உள்ளது. ஏடிஎம்களில் ரூ.500, 200 தாள்களே பெரும்பாலும் வருவதால், இவற்றிற்கு சில்லரை வாங்குவதற்குள் திண்டாட வேண்டிய நிலை மக்களுக்கு உள்ளது. இந்த நிலையில்தான், இந்தச் சிரமங்களைத் தீர்க்கும் விதமாக ஏடிஎம்களிலும் ரூ.10, 20 மற்றும் 50 மதிப்புள்ள கரன்சி நோட்டுகளை வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ரூ.500, 200 போன்ற நோட்டுகளை கொடுத்து சிறிய மதிப்புள்ள நோட்டுகளைப் பெறும் வகையில் ‘ஹைப்ரிட் ஏடிஎம்’கள் வைக்கப்படவுள்ளன. தற்போது மும்பையில் சோதனை முறையில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பணப் பரிவர்த்தனைகள் அதிகம் நடைபெறக் கூடிய உள்ளூர் சந்தைகள், ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் நிறுவப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ‘ஹைப்ரிட் ஏடிஎம்’கள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com