

திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரயில் போக்குவரத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படுமா என்பது குறித்து திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளர் முகுந்த் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும், இப்போது இயக்கப்படும் ரயில்கள் எதுவும் நிறுத்தப்படாது. அதே நேரம் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால் கூடுதல் ரெயில்கள் இயக்குவது பற்றி ஆலோசித்து முடிவு செய்வோம். இது தொடர்பான எந்த முடிவும் ரெயில்வே வாரியம் எடுக்கவில்லை. ஆனால் இப்போதைக்கு பயணிகள் ரெயில்கள் இயக்கப்படாது.
ரெயில்களில் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே ரெயில்வே பிளாட்பாரங்களில் நிற்க அனுமதிக்கப்படுவார்கள். 45 வயதுக்கு மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.