ஒடிசா: சந்தை வளாகத்தில் பயங்கர தீ விபத்து - 12 மணி நேரமாக தொடரும் தீயணைப்பு பணி

குறுகிய பாதையாக இருப்பதால் தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசா: சந்தை வளாகத்தில் பயங்கர தீ விபத்து - 12 மணி நேரமாக தொடரும் தீயணைப்பு பணி
Published on

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் பூரி நகரில் அமைந்துள்ள சந்தை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியாக விளங்கும் இந்த சந்தை வளாகத்தில், நேற்று இரவு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீயானது மளமளவென பரவியதால், அருகில் இருந்த கட்டடங்களும் தீப்பற்றி எரியத்தொடங்கின. இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். 12 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் 160 தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில், 140 சுற்றுலா பயணிகளும், 100 குடியிருப்பு வாசிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். குறுகிய பாதையாக இருப்பதால் தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் 12 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com