கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட விவகாரம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட விவகாரத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட விவகாரம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
Published on

கொள்ளேகால்,

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சுலவாடி கிராமத்தில் அமைந்துள்ள மாரம்மா அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் கோபுரத்தின் மீது கலசங்களை வைத்து பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அந்த பிரசாதத்தை சாப்பிட்ட 12 பேர் பலியானார்கள். 104 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 26 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார்.

இதனால் இச்சம்பவத்தில் பலி எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com