

பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேற்று கலபுரகியில் பிரசாரம் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து கலபுரகியில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் எடியூரப்பா பேசுகையில், தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. பிரதமர் மோடி முன்னிலையில் மே மாதம் 17 அல்லது 18-ந் தேதி நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்பேன். பதவி ஏற்பு விழாவில் 3 லட்சம் முதல் 4 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்றார்.
தேர்தலில் காங்கிரசை நிராகரிக்க மக்கள் முடிவு செய்து விட்டனர். புதிய கர்நாடகத்தை கட்டமைக்க மக்கள் ஆதரவு வழங்குவார்கள். பிரதமர் மோடி பிரசாரம் செய்ய தொடங்கியதும் பா.ஜனதாவுக்கு இன்னும் கூடுதல் பலம் கிடைக்கும். தேர்தலுக்கு பிறகு மத்திய அரசு தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்யும் என்றும் எடியூரப்பா பேசினார்.