பாலக்காடு இரட்டை கொலை வழக்கு: 25 குற்றவாளிகளுக்கு ஆயுள் தன்டனை விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு!

பாலக்காடு இரட்டை கொலை வழக்கில் 25 குற்றவாளிகளுக்கு ஆயுள் தன்டனை விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
பாலக்காடு இரட்டை கொலை வழக்கு: 25 குற்றவாளிகளுக்கு ஆயுள் தன்டனை விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு!
Published on

கோழிக்கூடு,

கேரள மாநிலம் மன்னார்க்காடு காஞ்சிரபுழா கல்லம்குழியில் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று, சிபிஎம் செயற்பாட்டாளர்கள் பள்ளத் நூருதீன், ஹம்சா ஆகிய இரு சகேதரர்கள் படுகெலை செய்யப்பட்டனர்.

இந்த கொலை வழக்கில் முஸ்லீம் லீக் தலைவர் மற்றும் பஞ்சாயத்து முன்னாள் துணைத் தலைவர் சி.எம் சித்திக் உட்பட 25 பேருக்கு பாலக்காடு விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபாரதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேரில் நான்காவது குற்றவாளியான ஹம்சப்பா வழக்கு விசாரணை தொடங்கும் முன்பே இறந்து விட்டார். மற்றொரு குற்றவாளி மைனர் என்பதால் இந்த வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

குற்றப்பத்திரிகையின்படி, இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், அரசியல் மற்றும் தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கொலைகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com