கோரக்பூர் மருத்துவமனையில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம், மூன்று நாட்களில் 61 குழந்தைகள் உயிரிழப்பு

கோரக்பூர் மருத்துவமனையில் மூன்று நாட்களில் 61 குழந்தைகள் உயிரிழந்த சம்பவமானது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோரக்பூர் மருத்துவமனையில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம், மூன்று நாட்களில் 61 குழந்தைகள் உயிரிழப்பு
Published on

கோரக்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் மாநில அரசு நடத்தும் பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த 60 குழந்தைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் அங்கிருந்து மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் பதிவாகி உள்ளது.

மூன்று நாட்களில் மருத்துவமனையில் 61 குழந்தைகள் உயிரிழந்து உள்ளன. ஜப்பனீஸ் என்சிபாலிட்டிஸ் என்று கூறப்படும் நோய்கள் கடுமையான மூளை வீக்கம், காய்ச்சலை ஏற்படுத்தும், இதன்காரணமாகவே உயிரிழப்பு நேரிட்டு உள்ளது என தெரிகிறது.

ஆகஸ்ட் 27, 28 மற்றும் 29-ம் தேதிகளில் மட்டும் மருத்துவமனையில் 61 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது.

என்சிபாலிட்டிஸ் வார்டில் சிகிச்சை பெற்றுவந்த 11 குழந்தைகள் உயிரிழந்து உள்ளன. பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் 25 குழந்தைகளும், குழந்தைகளுக்கான பொது மருத்துவ வார்டில் 25 குழந்தைகளும் உயிரிழந்து உள்ளன என தெரியவந்து உள்ளது. உத்தரபிரதேசம் மற்றும் அதன் அண்டைய மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளம் நேரிட்டு உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கையானது அதிகரிக்கும் என உள்ளூர் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளன.

கனமழை, வெள்ளம் மற்றும் நேர் தேங்குதல் காரணமாக என்சிபாலிட்டிஸ் தாக்கம் பரவும் எனவும் உள்ளூர் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

என்சிபாலிட்டிஸ் பிரிவில் தீவிரமாக பணியாற்றி வரும் உள்ளூர் குழந்தைகள் நல மருத்துவர் ஆ என் சிங் பேசுகையில், கடந்த ஜனவரில் என்சிபாலிட்டிஸ் பரவலை கட்டுப்படுத்த இடைவிடாது பணிகள் மேற்கொள்ளப்பட்டது, ஆனால் பின்னர் ஒட்டுமொத்த நிர்வாகமும் உ.பி. தேர்தலில் பிசியாகிவிட்டது, என்றார். இதனையடுத்து உடனடியாக பருவமழை பெய்யவும் குழந்தைகள் மத்தியில் பாதிப்பானது அதிகரிக்க தொடங்கியது. கொசுக்களை ஒழிப்பு பணிகள், தூர் வாரும் பணிகள், தடுப்பூசி மற்றும் நீரில் குளோரினை கலந்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது குறிப்பிட்ட நேரங்களில் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவமனையில் மாநில அரசு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளது, இருப்பினும் நோயாளிகளின் எண்ணிக்கையானது உயர்ந்து கொண்டு வருகிறது. ஒரு படுக்கையில் 4 குழந்தைகள் சிகிச்சை பெறும் நிலையும் காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com