

அகமதாபாத்,
குஜராத் மாநிலத்தில் இம்மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதையடுத்து விஜய் ரூபானி மீண்டும் முதல்வராக பதவியேற்றார். துணைமுதல்வராக நிதின் பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு சாலை மற்றும் கட்டுமானம், சுகாதாரம், மருத்துவ கல்வி ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டது. முந்தைய ஆட்சியில் அவருக்கு நிதித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த முறை நிதித்துறை, சவுரப் பட்டேல்லுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை முதல்வர் ரூமானி வசம் உள்ளது. தனக்கு நிதித்துறை ஒதுக்கப்படாமல் இருந்தாதல் கடும் அதிருப்தியில், நிதின் படேல் உள்ளார். இதனால், நிதின் பட்டேல் துணை முதல்வராக பொறுப்பேற்ற பின்னரும் ஒதுக்கப்பட்ட துறைகளின் பொறுப்பை இதுவரை ஏற்காமல் உள்ளார்.
இதுகுறித்து பட்டேல் சமூகத்தை சேர்ந்த ஹார்திக் பட்டேல் செய்தியார்களிடம் கூறுகையில், பாஜக மதிக்கவில்லை என்றால் துணை முதல்வர் நிதின் பட்டேல் கட்சியை விட்டு வெளியே வர வேண்டும். குஜராத் மக்களும், முன்னாள் முதல்வர் ஆனந்திபென் பட்டேலும், நிதின் பட்டேல் முதல்வராக வேண்டும் என விரும்பினர். ஆனால் அவர் முதல்வராக்கபடவில்லை, அந்த முடிவையும் அவர் ஏற்றுக்கொண்டார். மக்கள் தற்போது மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர் என கூறியிருந்தார்.
இந்நிலையில், நிதின் பட்டேலுக்கு ஆதரவாக வருகிற 1-ம் தேதி குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு சர்தார் பட்டேல் அமைப்பை சேர்ந்த லால்ஜி பட்டேல் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், குஜராத் முதல்வராக நிதின் படேலை அறிவிக்காவிட்டால், மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் லால்ஜி படேல் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹர்திக்படேல், பட இனத்தவருக்கு இட ஒதுக்கீடு அளிக்க கோரி, முன்னெடுத்த மிகப்பெரிய போராட்டத்தின் போது உறுதுணையாக லால்ஜி படேலும் இருந்தார்.சர்தார் படேல் இயக்கம் என்பதை நிறுவிய லால்ஜி படேல், இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
#gujaratdycm #nithinpatel