சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி - காங்கிரஸ் கருத்து

சுப்ரீம் கோர்ட், சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியளித்துள்ளது தொடர்பாக காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி - காங்கிரஸ் கருத்து
Published on

புதுடெல்லி,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10-50 வயது வரையுள்ள பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியும், அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்கவேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்று உள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பதிவில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு முற்போக்கான மற்றும் பரவலாக வரவேற்பை பெறக்கூடியது ஆகும். இதை காங்கிரஸ் முழு மனதுடன் வரவேற்கிறது. பாலினத்தின் அடிப்படையிலோ அல்லது வேறுவிதமாகவோ பெண்களுக்கு பாகுபாடு காட்டக் கூடாது என்பது தீர்ப்பில் மிகத் தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு பெண்களின் உரிமைகள் மீதான புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. பெண்களை மதச்சம்பிரதாயத்தின் கீழ் கட்டுப்படுத்தக் கூடாது என்பதையும் வெளிப்படுத்துகிறது. ஒரு சமுதாயம் பரிணாம வளர்ச்சி காணும்போது அதற்கேற்ப மத நம்பிக்கைகளும், சட்டங்களும் அதே போன்ற வளர்ச்சியை காண வேண்டும் என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com