ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. ஷீரடியில் வீற்றிருக்கும் சாய்பாபாவை தரிசனம் செய்வதற்காக உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில், பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மராட்டியம் வந்துள்ள பிரதமர் மோடி, ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலில் வழிபாடு நடத்தினார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடியுடன் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், கவர்னர் ரமேஷ் பாய்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com