சீக்கிய கலவரம்: காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் - பிரதமர் மோடி

1984 ஆம் ஆண்டு நடந்த சீக்கிய கலவரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
சீக்கிய கலவரம்: காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் - பிரதமர் மோடி
Published on

மும்பை,

1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை மூண்டது. வடமாநிலங்களில் பல இடங்களில் சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். டெல்லியின் ராஜ்நகரில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், அங்குள்ள குருத்வாரா ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டது. தலைநகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த சஜ்ஜன் குமார் உள்பட 6 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

இதனை சுட்டி காட்டி இன்று மும்பையில் நடைபெற்ற குடியரசு மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசும் போது,

1984-ம் ஆண்டு நடைபெற்ற சீக்கிய படுகொலைகளில் காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என கூறினார்.

மேலும் அவர் பேசும் போது,

உச்ச நீதிமன்றம் ஊழல் தொடர்பான சில குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரித்தது. என்ன நடந்தது.

அவர்கள் மூலம் ஒரு தெளிவான தீர்ப்பு கிடைத்தது. ரஃபேல் ஒப்பந்தம் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை ஆகியவற்றால் ஏற்படுத்தப்பட்டது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் அதிகாரத்தில் இருக்கும் போது இத்தகைய காரியம் நடக்கும் என்று யாரும் நினைத்ததில்லை.

ஹெலிகாப்டர் ஊழலில் முக்கிய நபரான கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியாவில் இருப்பார் என்று நினைத்து இருக்க மாட்டார்கள் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com