ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

மங்களூரு:

போலீஸ்காரர்

உத்தரகன்னடா மாவட்டம் ஒன்னாவர் தாலுகா நடுமஸ்கேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமேகவுடா (வயது 32). இவர், உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ராமேகவுடா கடந்த 2-ந்தேதியில் இருந்து வேலைக்கு வராமல் இருந்துள்ளார். அவரது செல்போனுக்கு போலீசார் தொடர்புகொண்டனர். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

மேலும் அவரது வீட்டுக்கு சென்றும் போலீசார் விசாரித்தனர். அப்போது தான் அவர் வீட்டிலும் இல்லாததது தெரியவந்தது. இந்த நிலையில், ஒன்னாவர் பகுதியில் கடற்கரை அருகே ஒரு மரத்தில் ராமேகவுடா தூக்கில் பிணமாக கிடந்தார்.

தற்கொலை

இதுபற்றி அறிந்ததும் ஒன்னாவர் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், ராமேகவுடா ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் அவர் அதிகளவு பணத்தை இழந்துள்ளார்.

மேலும் கடன் வாங்கியும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்துள்ளார். இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மலும் அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

உருக்கமான கடிதம்

அந்த கடிதத்தில், ஆன்லைன் சூதாட்டத்தால் அனைத்து பணத்தையும் இழந்துவிட்டேன். எனது தங்கைக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை. அவளுக்கு அரசு வேலையும் வாங்கி தர முடியவில்லை. இதனால் தற்கொலை செய்துகொள்கிறேன் என்று உருக்கமாக எழுதி இருந்தார்.

இதுகுறித்து ஒன்னாவர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com