

அந்தவகையில் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பெட்ரோல், டீசல் மூலமாக மத்திய அரசு ரூ.2.74 லட்சம் கோடி வரி வசூல் ஈட்டியிருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று கடுமையாக சாடியிருந்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், இந்த பணம் மூலம் என்னவெல்லாம் செய்திருக்க முடியும் தெரியுமா? மொத்த நாட்டுக்கும் தடுப்பூசி (ரூ.67 ஆயிரம் கோடி), 718 மாவட்டங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள், 29 மாநிலங்களில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி, 25 கோடி ஏழை மக்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் போன்றவற்றை செய்திருக்கலாம். ஆனால் இது எதுவும் நடக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்தியாவை பா.ஜனதா கொள்ளையடிக்கிறது என்ற ஹேஷ்டேக்கில் இந்த பதிவை பிரியங்கா வெளியிட்டு இருந்தார்.