ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏஜெண்டுகளுக்கு தடை: மத்திய அரசு பரிசீலனை

ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏஜெண்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏஜெண்டுகளுக்கு தடை: மத்திய அரசு பரிசீலனை
Published on

புதுடெல்லி,

ரெயில்வே துறையில் தனியார் பங்களிப்பை நியாயப்படுத்தும் வகையில் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், மக்களவையில் நேற்று கருத்து தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்த 12 ஆண்டுகளில் ரெயில்வே துறையில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. எல்லா நிதியையும் அரசே முதலீடு செய்ய வேண்டும் என்றால் அது நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் பாதிப்பை ஏற்படுத்தும். வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்படும். எனவே தனியார் துறையினரின் திறன்களை, வசதிகளை பயன்படுத்துவோம். அதில் செலவு குறையும். மேலும் அது, ரெயில்வே துறையை பலப்படுத்தும். அதன் விரிவாக்கத்துக்கு உதவியாகவும் அமையும்.

அதே நேரத்தில் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் தனியார் மையங்களையும், ஏஜெண்டுகளையும் தடை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

பொதுமக்கள் தங்கள் செல்போன் வாயிலாகவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள முடியும். உதவி தேவைப்படுவோர் அரசாங்கம் நடத்துகிற பொதுச்சேவை மையங்களை நாடிக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com