போலீஸ் அதிகாரி இருக்கையில் ராதே மா! போலீஸ் விசாரணையை தொடங்கியது

டெல்லியில் காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியின் இருக்கையில் சாமியார் ராதே மா இருந்தது தொடர்பாக விசாரணை தொடங்கியது.
போலீஸ் அதிகாரி இருக்கையில் ராதே மா! போலீஸ் விசாரணையை தொடங்கியது
Published on

புதுடெல்லி,

மும்பை போரிவிலி பகுதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வருபவர் பெண் சாமியார் ராதேமா (வயது46). இவர் குட்டை பாவாடை அணிந்தபடி வெளியான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. பெண் ஒருவர் ராதேமா மீது காந்திவிலி போலீஸ் நிலையத்தில் வரதட்சணை கொடுமை புகார் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். சாமியார் ராதேமாவிற்கு எதிராக மும்பையில் இரு வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் ராதேமாவிற்கு காவல் நிலையத்தில் மலர் தூவி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.

டெல்லி விவேக் விகார் போலீஸ் நிலையத்தில் போலீஸ் சிறப்பு கண்காணிப்பாளர் இருக்கையில் அமர்ந்து பேசும் அவருடைய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. டெல்லியில் போலீஸ் நிலையத்தில் சர்ச்சை சாமியார் ராதேமாவிற்கு வழங்கப்பட்ட சிறப்பு கவனிப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் நிலையத்தில் சாமியார் ராதேமாவிற்கு போலீசார் சிறப்பு மரியாதையும் வழங்கி உள்ளனர். போலீசார் மலர்களை தூவி சாமியார் ராதேமாவை வரவேற்று உள்ளனர். பாடல் பாடி ஆடிய காட்சியும் வெளியாகி உள்ளது.

வரதட்சணை வழக்கில் ராதேமாவின் பெயரை நீக்க கோரிய வழக்கை மும்பை ஐகோர்ட்டு கடந்த மாதம் நிராகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், போலீஸ் அதிகாரியின் இருக்கையில் சாமியார் ராதே மா இருந்தது தொடர்பாக விசாரணை தொடங்கியது. ராதே மா போலீஸ் நிலையத்திற்கு எதற்கு சென்றார் என்பது தொடர்பான தகவல் குழப்பமாகவே உள்ளது. இதற்கிடையே ராம் லீலா நிகழ்ச்சிக்கு போலீஸ் நிலையம் வழியாக சென்ற ராதே மா காரை நிறுத்தி, போலீஸ் நிலையரெஸ்ட் ரூமிற்கு சென்று உள்ளார் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com