

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், அது தொடர்பான மத்திய அரசின் கொள்கையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையானது, பண மதிப்பிழப்புக்கு குறைவானது இல்லை. சாதாரண மக்கள் வரிசைகளில் காத்துக்கிடப்பார்கள். அவர்களது பணம், ஆரோக்கியம், வாழ்க்கை ஆகியவற்றுக்கு இழப்பு நேரிடும். ஆனால், கடைசியில் சில பெரும் தொழில் அதிபர்கள் மட்டுமே பலன் அடைவார்கள் என கூறி உள்ளார்.