எம்.பியால் பாலியால் பலாத்காரம்: சுப்ரீம் கோர்ட் அருகே தீக்குளித்த இளம்பெண் உயிரிழப்பு

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பியான அதுல் ராய் மீது இளம்பெண் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசாரிடம் சரண் அடைந்த அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
எம்.பியால் பாலியால் பலாத்காரம்: சுப்ரீம் கோர்ட் அருகே தீக்குளித்த இளம்பெண் உயிரிழப்பு
Published on

புதுடெல்லி

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பியால் பலாத்காரம் செய்யப்பட்டதாக இறுதி வாக்குமூலம் அளித்த இளம் பெண்( வயது 24) சுப்ரீம் கோர்ட் வாயில் அருகே காதலனுடன் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

உத்தரப்பிரதேச பகுஜன் சமாஜ் கட்சி எம்.பியான அதுல் ராய் மீது இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசாரிடம் சரண் அடைந்த அதுல் ராய் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

சிறையில் இருக்கும் எம்.பிக்கு சலுகைகள் அளித்துவருவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறி வந்தார். இந்த நிலையில் கடந்த 16ந் தேதி திடீரென டெல்லி சுப்ரீம் கோர்ட் வாயில் அருகே தனது காதலனுடன் தீக்குளித்தார். உயிருக்குப் போராடி வந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். அவரது காதலர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.

தீக்குளிப்பதற்கு முன், அவர்கள் ஒரு பேஸ்புக் லைவ் வீடியோவை வெளியிட்டு இருந்தனர்.அதில் அந்த பெண் எம்.பி.அதுல் ராய், மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு நீதிபதி ஆகியோர் மீது குற்றஞ்சாட்டி இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com