ஓட்டுப்பதிவு எந்திரம் குறித்து பொய் புகார் கூறும் வாக்காளரை தண்டிக்கும் விதிமுறை மறுபரிசீலனை - தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்

ஓட்டுப்பதிவு எந்திரம் குறித்து பொய் புகார் கூறும் வாக்காளரை தண்டிக்கும் விதிமுறை குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஓட்டுப்பதிவு எந்திரம் குறித்து பொய் புகார் கூறும் வாக்காளரை தண்டிக்கும் விதிமுறை மறுபரிசீலனை - தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்
Published on

புதுடெல்லி,

தேர்தலின்போது, தங்களது ஓட்டு தவறாக பதிவாகி விட்டதாக, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அல்லது ஒப்புகை சீட்டு (விவிபாட்) எந்திரங்கள் மீது வாக்காளர்களில் சிலர் புகார் கூறும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அப்படி புகார் கூறும் வாக்காளர், தேர்தல் நடத்தை விதிகள் 49எம்ஏ பிரிவின்படி, சோதனை ஓட்டு போட அனுமதிக்கப்படுவார். அதில் அவர் கூறியது பொய் என்று கண்டுபிடிக்கப்பட்டால், இந்திய தண்டனை சட்டம் 177-வது பிரிவின்படி அவர் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம்.

சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலின்போது, இந்த தண்டனை விதிமுறை அறிவிக்கப்பட்டது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், சர்ச்சைக் குரிய இந்த விதிமுறை மறுபரிசீலனை செய்யப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா நேற்று தெரிவித்தார். தேர்தல் முடிந்து விட்டதால், அந்த விதி முறையை மாற்றி அமைப்பதா? தளர்த்துவதா? என்பதை ஆலோசித்து முடிவு எடுப்போம் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com