

புதுடெல்லி,
டெல்லியில் 70-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேசியக்கொடியை ஏற்றிவைத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.
விழாவில் மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. ராணுவ அணிவகுப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பார்வையிடுகிறார்.
அணி வகுப்பில் இந்திய ராணுவத்தின் குதிரைப்படையின் அணிவகுப்பு, இந்திய ராணுவத்தின் பீஷ்மா ரக பீரங்கிகள் அணிவகுப்பு, கண்ணிவெடிகளை கண்டுபிடித்து முன்னேறும் டாங்கிகள் அணிவகுப்பு
M-777 ஹாவிட்சர் ரக பீரங்கிகளுடன் வீரர்கள் அணிவகுப்பு, ஆகாஷ் ஏவுகணையுடன் ராணுவ வீரர்கள் மிடுக்கான அணிவகுப்பு
அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய ஹெலிகாப்டர்கள் சாகசம், மெட்ராஸ் ரெஜிமென்ட் படைப்பிரிவினர் மிடுக்கான அணிவகுப்பு
முதன்முதலாக பெண் அதிகாரி பாவனா கஸ்தூரி தலைமையில் பெண் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு, ராணுவ படைப்பிரிவு அணிவகுப்பு, சுகோய் 30 ரக விமானங்களின் மாதிரிகளுடன் வீரர்கள் அணிவகுப்பு
விமானப்படையின் பலத்தை பறைசாற்றும் வாகனங்களுடன் அணிவகுப்பு, கடலோர காவல்படையினரின் கண்கவர் அணிவகுப்பு
ஒட்டகப்படையினரின் அணிவகுப்பு, என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு
என்.சி.சி. மாணவர்களை தொடர்ந்து மாணவிகள் அணிவகுப்பு, இந்திய மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள்
இந்திய சுதந்திர போராட்ட நிகழ்வுகளை சித்தரிக்கும் வாகன அணிவகுப்பு , வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை பிரதிபலிக்கும் நிகழ்வுடன் அணிவகுப்பு நடைபெற்றது.