

ஐதராபாத்,
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் சரூர்நகர் பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமி பி. அனுஷா. கடந்த வருடம் ஏப்ரலில் சிறுமிக்கும், அவரது 26 வயது நிறைந்த உறவினருக்கும் திருமணம் செய்து வைக்க அனுஷாவின் பெற்றோர் முடிவு செய்தனர்.
இதனை அறிந்த போலீசார் மற்றும் நகர குழந்தை உரிமைகள் அமைப்பினர் திருமணம் நடைபெறாமல் தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டனர்.
இந்த நிலையில் 10ம் வகுப்பு மாணவியான அனுஷா பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் திறம்பட விளையாடியுள்ளார். இதற்கு அனைத்து தரப்பில் இருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன.
அடுத்து நடைபெற உள்ள ஜூனியர் ரக்பி போட்டியிலும் அனுஷா பங்கேற்க உள்ளார். சிறுமி அனுஷா நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கவுரவிக்கப்பட்டார். அதில் கலந்து கொண்டு வாழ்த்திய நகர காவல் ஆணையாளர் பகவத், காவல் துறை சிறுமி கல்வி பயின்று முடிக்கும் வரை அவருக்கு தேவையான நிதியுதவியை வழங்கும் என கூறினார்.