

புதுடெல்லி,
பண மோசடி வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனத்துடன் ஹவாலா பண பரிமாற்றம் தொடர்புடைய வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்ட சம்பவம், பாஜகவின் தோல்வி பயத்தை காட்டுவதாக டெல்லி துணை முதல்-மந்தி மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இது தொடாபாக அவர் தனது டுவிட்டால், "சத்யேந்தர் ஜெயின் இமாச்சல பிரதேசத்தின் தேர்தல் பொறுப்பாளராக உள்ளா. அங்கு நடைபெற உள்ள தேர்தலில் பாஜக தோல்வியடையும் என அஞ்சுவதால், சத்யேந்தர் ஜெயின் போலி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்" என மணீஷ் சிசோடியா பதிவிட்டுள்ளா.