நாடாளுமன்ற தேர்தலில் முலாயம் பேரனுக்கு ‘சீட்’ மறுப்பு

நாடாளுமன்ற தேர்தலில் முலாயம் பேரனுக்கு சீட் மறுக்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலில் முலாயம் பேரனுக்கு ‘சீட்’ மறுப்பு
Published on

லக்னோ,

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் அஜம்கார், மெயின்புரி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் 2014-ம் ஆண்டு போட்டியிட்டு வென்றார். பின்னர் மெயின்புரி தொகுதியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதியில் முலாயம் பேரன் தேஜ் பிரதாப் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாடி கட்சி அறிவித்தது. இதில் மெயின்புரி தொகுதியில் மீண்டும் முலாயம் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தொகுதியில் வென்ற தேஜ் பிரதாப் சிங் பெயர் முதல் பட்டியலில் இடம் பெறவில்லை.

இதனால் தனக்கு அஜம்கார், காஜியாபூர், சம்பல், ஜான்பூர் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றை ஒதுக்க வேண்டும் என தேஜ் பிரதாப் சிங் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதற்கு கட்சி தரப்பில் இருந்து எந்த வித பதிலும் இல்லை.

இதற்கு காரணம் கட்சியின் பொது செயலாளர் ராம் கோபால் யாதவ் தான் என தேஜ் பிரதாப் சிங் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி அவருடைய உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com