

கவுகாத்தி,
அசாம் மாநிலத்தின் நவுகாங் தொகுதி பா.ஜனதா எம்.பி.யாக இருப்பவர் ராஜன் கோஹெய்ன். மத்திய ரெயில்வே இணை மந்திரியாகவும் உள்ளார். இவர் 1999-ம் ஆண்டு முதல் நவுகாங் தொகுதியில் போட்டியிட்டு 4 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நவுகாங் தொகுதியில் போட்டியிட ரூபக் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜன் கோஹெய்னுக்கு இந்த முறை சீட் மறுக்கப்பட்டுள்ளது.