சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை கற்றுத்தர வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு

9-ம் வகுப்பில் இருந்து அல்ல சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை கற்றுத்தர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 வயது சிறுவனுக்கு ஜாமீன் கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அவன் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 376-வது பிரிவின்கீழ் கற்பழிப்பு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதிகள் சஞ்சய் குமார், அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

சிறுவனுக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், பரபரப்பு கருத்துகளையும் தெரிவித்தனர். நீதிபதிகள் கூறியதாவது:-

குழந்தைகளுக்கு 9-ம் வகுப்பில் இருந்து இல்லாமல், மிக சிறு வயதிலிருந்தே பாலியல் கல்வி கற்றுத்தரப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. மேல்நிலை பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

அப்போதுதான், பருவம் வந்த பிறகு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் குறித்து இளம் பருவத்தினர் தெரிந்து கொள்ள முடியும். அதுதொடர்பாக செலுத்த வேண்டிய கவனமும், பின்பற்ற வேண்டிய எச்சரிக்கையும் தெரியவரும். உரிய அதிகாரிகள், இதில் தங்களது மனதை செலுத்தி, சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com