பாலியல் குற்றச்சாட்டு: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அருண் ஜெட்லி ஆதரவு

பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அருண் ஜெட்லி ஆதரவு தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டு: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அருண் ஜெட்லி ஆதரவு
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஞ்சன் கோகாய், இது நீதித்துறை சுதந்திரம் மீது விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என குற்றம் சாட்டினார். அவருக்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், இன்று கோர்ட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் நீதிபதிகள் மிகுந்த மிரட்டலுக்கு ஆளாகின்றனர். சில வக்கீல்கள் தங்களின் சுயலாபத்துக்காக இந்த மிரட்டலை ஒரு உத்தியாக பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய மிரட்டலும், அவமதிப்பும் அவர்களின் ஆயுதமாக இருந்து வருகிறது என்று குறிப்பிட்டு உள்ளார். நீதித்துறை போன்ற அமைப்பை சீர்குலைப்போரின் இத்தகைய நடவடிக்கைகள் இதுவே முதலும், கடைசியுமாக இருக்கப்போவது இல்லை என்று கூறியுள்ள அருண் ஜெட்லி, இந்த பிரச்சினையை வழக்கமான நடைமுறைகளின்படி கையாண்டால், அது அதிகரிக்கவே செய்யும் எனவும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நீதிபதிகளுக்கு எதிராக இத்தகைய அமைப்பு சீர்குலைப்பாளர்களின் தாக்குதல்களை இந்தியா தொடர்ந்து சந்தித்து வருவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com